ஈரோட்டில் கஞ்சா விற்றவர் சிக்கினார்

ஈரோட்டில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனா்.

Update: 2023-07-19 21:01 GMT

தாளவாடி அருகே உள்ள எரகனள்ளி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கல்மண்டிபுரம் குட்டை அருகே வாலிபர் ஒருவர் பையுடன் நின்று கொண்டு இருந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர்.

அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கல்மண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜ் (வயது28), அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்