ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார்

அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார்

Update: 2022-12-16 20:13 GMT

ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டுரோடு பகுதியை சோ்ந்த கணேசனின் மனைவி மல்லிகா (வயது 48) ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-

எனது மகன் சதீஸ்குமார் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து உள்ளார். அவர் வேலை தேடி வந்தபோது கடந்த 2017-ம் ஆண்டு ஈரோட்டை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். மேலும், மின்சார வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கி கொடுப்பதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறினார். இதுவரை மொத்தம் ரூ.13 லட்சம் அவரிடம் கொடுத்து உள்ளேன். ஆனால் இதுவரை அவர் அரசு வேலை எதுவும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணத்தை திருப்பி கொடுக்கும்படி பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து என்னிடம் மோசடி செய்த ரூ.13 லட்சத்தை மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்