ஈரோட்டில்ரெயில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் ரெயில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-05-23 20:44 GMT

அகில இந்திய ரெயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் கோட்ட தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். மண்டல துணைச்செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.

வந்தே பாரத் ரெயில் உள்பட பல புதிய ரெயில்களை இயக்க போதுமான ரெயில் ஓட்டுனர்களை நியமனம் செய்ய வேண்டும். பெண் ரெயில் ஓட்டுனர்களுக்கான அடிப்படை வசதிகளை உடனே ஏற்படுத்தி தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ரெயில் ஓட்டுனர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்