ஈரோட்டில்தூக்குப்போட்டு வடமாநில வாலிபர் தற்கொலை

ஈரோட்டில் தூக்குப்போட்டு வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-08-24 21:37 GMT

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ரிச்சுமந்தல் (வயது 46). இவர் தனது மகன் சம்ரேஷ்மந்தலுடன் (19) ஈரோடு திண்டல் பகுதியில் தங்கி இருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். சம்ரேஷ்மந்தல் சரியாக வேலைக்கு செல்லாததால் தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சம்ரேஷ்மந்தல் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சம்ரேஷ்மந்தல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்