ஈரோட்டில் லாரியில் இருந்து நடுரோட்டில் சரிந்து விழுந்த விறகுகள்

ஈரோட்டில் லாரியில் இருந்து நடுரோட்டில் விறகுகள் சரிந்து விழுந்தன.

Update: 2023-06-18 21:11 GMT

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து விறகுகள் பாரம் ஏற்றப்பட்ட லாரி ஒன்று ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லுக்கு வந்து கொண்டு இருந்தது. அந்த லாரி ஈரோடு மீனாட்சி சுந்தரம் சாலையில் (பிரப்ரோடு) மாநகராட்சி அலுவலகம் அருகில் வந்தபோது திடீரென லாரியில் பழுது ஏற்பட்டது. இதனால் லாரி உடனடியாக நின்றதால் லாரியில் இருந்த விறகுகள் மளமளவென சரிந்து நடுரோட்டில் விழுந்தது. அப்போது அந்த பகுதியில் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போக்குவரத்தை மாற்றி விட்டனர். லாரியில் ஏற்பட்ட பழுதை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை என்பதால் மாற்று லாரி வரவழைக்கப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலமாக மாற்று லாரியில் விறகுகள் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணிகள் நேற்று மதியம் வரை நடந்தது. எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக காணப்படும் மீனாட்சி சுந்தரம் சாலையில் லாரி பழுதாகி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்