ஈரோட்டில்வக்கீல்கள் உண்ணாவிரதம்

ஈரோட்டில் வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனா்

Update: 2023-08-31 20:35 GMT

இந்திய தண்டனை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் வகையில் முதல் கட்டமாக ஐ.பி.சி. எனப்படும் இந்திய தண்டனை சட்டத்தின் பெயரை இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முயற்சி செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய தண்டனை சட்டத்தின் பெயரை மொழி மாற்றம் செய்வதை கண்டித்து, ஈரோடு ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்துக்கு அட்வகேட் அசோசியேசன் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

இதுகுறித்து வக்கீல்கள் கூறும்போது, 'மத்திய அரசு, இந்திய தண்டனை சட்டத்தின் பெயர் மாற்றத்தில் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது இந்தியாவின் பன்முக தன்மையை சிதைக்கும். பாமர பொதுமக்கள் மொழி தெரியாமல் சட்டம் குறித்து அறிந்து கொள்ள சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே எங்களுடைய கோரிக்கையை ஏற்று மொழி மாற்றத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்' என்றனர். இதில் செயற்குழு உறுப்பினர் சரவணன், தேவராஜன், அருள்முருகன், துரைசாமி மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்