ஈரோட்டில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-16 21:43 GMT

மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெறக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:-

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மக்களின் நிலையை உணர்ந்து அமல்படுத்தாத நிலையில் தற்போதைய தி.மு.க. அரசு மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளதை கண்டிக்கிறோம். அதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

ஊழல் மிகுந்த ஆட்சி

மின் கட்டண உயர்வால், ஏழை, எளியோர் மட்டுமின்றி, தொழில் செய்வோர், அலுவலகங்கள், ஆஸ்பத்திரி, தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க. அரசு, மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது மக்களை கடுமையாக பாதிக்கும். அனைத்து துறைகளிலும் ஊழல் மிகுந்த ஆட்சியாக தி.மு.க. உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்