ஈரோட்டில்வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது
வேளாண்மை
ஈரோடு மாவட்டத்தில் மாதந்தோறும் வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டம் தொடங்கும்போது விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது. பகல் 11.30 மணிக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பகுதி விவசாய பிரச்சினை தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கலாம். 12.30 மணிக்கு அதற்குரிய விளக்கம் அளித்து அதிகாரிகள் பேசுகிறார்கள். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.