ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு; வஞ்சிரம் கிலோ ரூ.750-க்கு விற்பனை

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.750-க்கு விற்பனை ஆனது.

Update: 2022-10-30 21:35 GMT

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.750-க்கு விற்பனை ஆனது.

12 டன் மீன்கள்

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். கடல் மீன்கள் அதிக அளவில் விற்கப்படுவதால் மக்கள் அதிகாலை முதலே மீன்களை வாங்கி செல்வார்கள். தூத்துக்குடி, காரைக்கால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கு தினந்தோறும் 8 டன்கள் மீன்கள் வரத்தாகி வந்தன நிலையில் நேற்று 12 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தன. மீன்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் விலையும் சற்று உயர்ந்தே இருந்தன. அனைத்து மீன்களும் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்திருந்தன.

விலை விவரம்

ஈரோடு மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

வஞ்சரம் -ரூ.750, சீலா பெரிய மீன் -ரூ.600, சிறிய மீன்-ரூ.300, சங்கரா -ரூ.350, அயிலை -ரூ.200, மத்தி -ரூ.170, முரல் -ரூ.300, திருக்கை -ரூ.400, ராட்டு மீன்- ரூ.300 முதல் ரூ.500 வரை, வவ்வால் மீன் -ரூ.700, இறால் - ரூ.650, சுறா -ரூ.600, நண்டு -ரூ.600.

இதேபோல் கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரமும் அமோகமாக இருந்தது. இதேபோல் இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்