ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

ஊர்க்காவல் படை

Update: 2022-12-10 20:40 GMT

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் துறைக்கு உதவியாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்கு ஊர்க்காவல் படையினர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 67 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்புவதற்காக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஆனந்தகுமார் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. அதில் 169 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடல்தகுதி தேர்வு நடந்தது. இதில் உயரம், உடல் எடை பார்க்கப்பட்டு, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதில் 14 பெண்கள் உள்பட மொத்தம் 136 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களின் நன்னடத்தை விவரங்களை சரிபார்த்தபிறகு காலியாக உள்ள 67 இடங்களில் 58 ஆண்கள், 9 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்