ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்ற பெண் உள்பட 6 பேர் கைது
ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்ற பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனா்.
ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் பதுக்கல்
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரில் போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கருங்கல்பாளையம் போலீசார் கிருஷ்ணம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவர் கிருஷ்ணம்பாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்த அருண் (வயது 34) என்பதும், அவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 9½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பெண் கைது
இதேபோல் ஈரோடு காந்திஜிரோட்டில் புகையிலை பொருட்களை விற்றதாக சூரம்பட்டி வலசு அணைக்கட்டுரோடு இந்திரா வீதியை சேர்ந்த மணிகண்டனை (34) சூரம்பட்டி போலீசாரும், மூலப்பட்டறை பகுதியில் புகையிலை பொருட்களை விற்றதாக கனிராவுத்தர்குளம் சின்னசேமூர் பகுதியை சேர்ந்த முபாரக் பாஷா (42) என்பவரை கருங்கல்பாளையம் போலீசாரும் கைது செய்தனர்.
தண்ணீர்பந்தல்பாளையம்ரோடு பகுதியில் புகையிலை பொருட்களை விற்றதாக ஈரோடு ஆர்.என்.புதூர் மரவபாளையத்தை சேர்ந்த பாபுவின் மனைவி பெருமாயி (42) என்பவரை கருங்கல்பாளையம் போலீசாரும், இடையன்காட்டுவலசு சின்னமுத்து வீதியில் புகையிலை பொருட்களை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் (65) என்பவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசாரும், ஈரோடு பூந்துறைரோடு அசோக்நகரில் புகையிலை பொருட்களை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ரவி (47) என்பவரை ஈரோடு தாலுகா போலீசாரும் கைது செய்தனர்.