வெவ்வேறு இடங்களில்2 ஆம்னி வேன்களில் திடீர் தீ விபத்து

வெவ்வேறு இடங்களில் 2 ஆம்னி வேன்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-09-05 00:58 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் வெங்கடாசலம் பிள்ளை வீதியை சேர்ந்தவர் தாஜ். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தார். மணிக்கூண்டு அருகே சென்றபோது ஆம்னி வேனில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதைத்தொடர்ந்து வேனின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆம்னி வேனை நிறுத்தும்படி சத்தம் போட்டு எச்சரிக்கை விடுத்தனர். அவர்களுடைய சத்தம் கேட்டு உடனடியாக ஆம்னி வேனை தாஜ் நிறுத்தி விட்டு கீேழ இறங்கினார்.

இதனால் அவர் காயமின்றி உயிர் தப்பினார். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை ஊற்றி ஆம்னி வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ஆம்னி வேனில் இருந்த இருக்கைகள் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவத்தால் சத்தியமங்கலம் மணிக்கூண்டு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டி.என்.பாளையத்தை அடுத்த அரக்கன் கோட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 48). இவருடைய ஆம்னி வேனில் பெட்ரோல் கசிவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை சரி செய்வதற்காக நேற்று காலை கள்ளிப்பட்டியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்புக்கு ஆம்னி வேனை ஓட்டி சென்று கொண்டிருந்தார். கள்ளிப்பட்டி சின்னாரி தோட்டம் அருகே சென்றபோது ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை கண்டதும் சாமியப்பன் சுதாரித்து கொண்டு உடனடியாக வேனில் இருந்து குதித்து உயிர் தப்பினார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்