தூத்துக்குடி தருவைகுளத்தில் பனை தொழிலாளர்கள் கருத்தரங்கு
தூத்துக்குடி தருவைகுளத்தில் பனை தொழிலாளர்கள் கருத்தரங்கு நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் தருவைகுளத்தில் பனைத் தொழிலாளர்கள் கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தருவைகுளம் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். பொருளாளர் திரவியம் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில், தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் சங்கப் பொதுச்செயலர் ராயப்பன், தமிழக பனைவாரிய உறுப்பினர் எடிசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட பனை மரங்களில் இருந்து மற்ற மாநிலங்களில் அனுமதி அளித்துள்ளது போல் தமிழக அரசு உடனடியாக பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்தபடி ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில்ராஜபாளையம் பனைத்தொழிலாளர் ஜெயராஜ், தருவைக்குளம் பிச்சையா, தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் சங்க தலைவர் அரிபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தூத்துக்குடி காமராஜ் நற்பணி மன்றத் தலைவர் லாரன்ஸ் செய்திருந்தார்.