சென்னை விமான நிலையத்தில் ரூ. 36 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 36.32 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-09-19 09:29 GMT

சென்னை,

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு எம். மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் செப்டம்பர்-17 அன்று சென்னை வந்த சையத் இப்ராகிம் முகமது ரக்பி என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது,தங்கத்தை பசை வடிவில் ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 707 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் முழுக்கால் சட்டைப்பையில் மறைத்து எடுத்து வந்த 116 கிராம் தங்கச்சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையின் போது, மொத்தம் ரூ. 36.32 லட்சம் மதிப்புள்ள 823 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்