கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு நன்றி விழா

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு நன்றி விழா நடந்தது.

Update: 2023-07-26 18:45 GMT

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் 1990 முதல் 1996 வரை படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் நன்றி விழாவை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி நன்றி செலுத்தினர். ஆசிரியர்களும், தங்கள் மாணவர்களை வாழ்த்தி ஆசி வழங்கினர். விழாவில் திரளான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்