பாறைக்குட்டம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
பாறைக்குட்டம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாறைக்குட்டம் கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு புதியம்புத்தூர் கால்நடை மருத்துவர் கவுரிசங்கர் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு சினை பரிசோதனையும், சேயற்கை முறையில் கருவூட்டல், குடல் புண் நீக்குதல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், சுண்டுவாத அறுவை சிகிச்சை உட்பட பல சிகிச்சைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிறந்த கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பாறைக்குட்டம் பஞ்சாயத்து தலைவர் மாடசாமி, துணைத தலைவர் பேச்சுத்தாய், கால்நடை ஆய்வாளர் முருகன், கால்நடை உதவியாளர் பார்வதி, மக்கள் நல பணியாளர் வசந்தா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.