ஆத்தூரில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆத்தூரில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆத்தூர் கிராம சாவடி அலுவலகம் முன்பு மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை கண்டித்தும், அம்மாநிலத்தில் நடந்துவரும் கலவரத்தை தடுத்து நிறுத்த கோரியும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் நிஜார், திருச்செந்தூர் தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல்லா, நகர செயலாளர் அபூபக்கர் சித்திக், மாவட்ட பொதுச் செயலாளர் காதர் மைதீன், மாவட்ட பொருளாளர் சேக் அஸ்ரப் அலி, திராவிட விடுதலைக் கழக மாநில பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் தமிழ் குட்டி, தமிழ் புலிகள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாலு, திருச்செந்தூர் தொகுதி தலைவர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.