அந்தியூர் கால்நடை சந்தையில் நாட்டு பசு மாடு ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் நாட்டு பசு மாடு ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனையானது.

Update: 2023-06-14 21:51 GMT

அந்தியூர்

அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. இதற்கு ஈரோடு, பர்கூர், அந்தியூர், மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, எடப்பாடி, கொங்கணாபுரம், தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.2 லட்சத்துக்கும், கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.80 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும், நாட்டு பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.70 ஆயிரத்திற்கும் விலை போனது.

ஜெர்சி பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்திற்கும், அதிகபட்சமாக ரூ.40 ஆயிரத்திற்கும், சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.45 ஆயிரத்திற்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.70 ஆயிரத்திற்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.15 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன.

ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம், பொள்ளாச்சி, திருப்பூர், கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்