அந்தியூர் கால்நடை சந்தையில் நாட்டு பசு மாடு ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் நாட்டு பசு மாடு ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

Update: 2022-12-11 21:44 GMT

அந்தியூர்

அந்தியூர் கால்நடை சந்தையில் நாட்டு பசு மாடு ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

கால்நடை சந்தை

அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு ஈரோடு, அந்தியூர், பர்கூர், மேட்டூர், கொளத்தூர், கொங்கணாபுரம், பண்ணவாடி, எடப்பாடி, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.90 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், பர்கூர் இன காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.35 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

பசு மாடு

சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசு மாடு குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.45 ஆயிரத்துக்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.35 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.70 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை விலைபேசி பிடித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்