அந்தியூர் குதிரை சந்தையில் ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட குதிரைபார்வையாளர்களை கவர்ந்த மயிலைக்காளை
அந்தியூர் குதிரை சந்தையில் ஒரு குதிரை ரூ.25 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது பார்வையாளர்களை மயிலைக்காளை கவர்ந்தது
அந்தியூர் குதிரை சந்தையில் குதிரைகள், நாட்டு இன மாடுகள் என்று பார்வையாளர்களை வியக்க வைக்கும் கால்நடைகள் அதிகம் உள்ளன. இதில் 64 அங்குலம் உயரம் வளர்ந்து அசத்தும் நொக்ரா குதிரை அனைவரையும் கவருகிறது. இங்குள்ள காங்கேயம் மயிலைக்காளையும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. நவலடி பண்ணை என்ற பெயரில் இங்கு அரங்கு அமைத்திருக்கும் ஓடப்பாறை பகுதியை சேர்ந்த செல்வராஜ் கூறியதாவது:-
இந்த குதிரை 2½ வயதாக இருந்தபோது லூதியானாவில் நடந்த குதிரை சந்தையில் இருந்து வாங்கி வந்தேன். இது 11 சுழிகள் உள்ள மிக சிறப்பு வாய்ந்த குதிரையாகும். 9 சுத்த சுழிகளுடன், ராஜா, மந்திரி சுழிகளும் உள்ளன. அதுமட்டுமின்றி சாதாரணமாக ஒரு குதிரை 58 முதல் 60 அங்குலம் வரை உயரம் வளரும். ஆனால் இந்த குதிரை 64 அங்குலம் உயரம் உள்ளது. அந்தியூர் சந்தையில் உள்ள குதிரைகளிலேயே இதுதான் உயரம் அதிகமான குதிரையாகும். இதன் கழுத்துப்பகுதி நீளமானது. 2 காதுகளும் ஒன்றை ஒன்று அழகாக வளைந்து தொடும். மிக அதிக அழகும், கம்பீரமும் கொண்ட இந்த குதிரைக்கு தற்போது 6 வயதாகிறது. ரூ.25 லட்சம் விலை வைத்து இருக்கிறார்கள். ஆனால் நான் விற்க விரும்பவில்லை. இனச்சேர்க்கைக்காக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் காங்கேயம் இன மயிலைக்காளை உள்ளது. பழையக்கோட்டை பட்டக்காரர் பண்ணையில் இருந்து 4 வயது குட்டியாக வாங்கினேன். இப்போது 8 வயதாகிறது. கருப்பும், வெள்ளையும் கலந்த இந்த மயிலைக்காளை பார்ப்பதற்கே கம்பீரமாக உள்ள
து. இங்கு வரும் அனைவரையும் கவரும் காங்கேயம் மயிலைக்காளைக்கு ரூ.2½ லட்சம் விலை வைக்கப்பட்டு உள்ளது. நான் எனது பண்ணையில் போயர் இன ஆடுகள் வளர்த்து வருகிறேன். அவற்றையும் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன். கோவை மாவட்டம் முழுவதும் ஆன்லைன் மூலம் வில்லேஜ் மீட் ஷாப் என்ற பெயரில் வினியோகம் செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.