அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது
அந்தியூர் கால்நடை சந்தை நேற்று கூடியது. இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகள் கொண்டு வரப்பட்டன. இதில் கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.75ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.1லட்சத்து 50 ஆயிரத்துக்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.70 ஆயிரத்துக்கும், சிந்து பசுமாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.40 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
ஜெர்சி பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.35 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கும், பர்கூர் இன காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.40 ஆயிரத்துக்கும், பர்கூர் இன பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.30 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டன.
ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், திருப்பூர், கோவை, தர்மபுரி, மேட்டூர், தர்மபுரி, பண்ணவாடி மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்து சென்றனர்.