அம்மன்புரத்தில்வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுசரிப்பு

அம்மன்புரத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-09-26 18:45 GMT

ஆறுமுகநேரி:

திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம்

திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் மூலக்கரை என்.வெங்கடேச பண்ணையார் 20-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது சமாதியில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், நடைபெற்றது.

தொடர்ந்து மூலக்கரையைச் சேர்ந்த பெண்கள் 51 பேர் பொங்கல் இட்டு படையல் வைத்தனர். தொடர்ந்து அவரது சமாதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவியும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராதிகா செல்வி, அவரது தாயார் தங்க புஷ்பம், சகோதரர் குமரன், வெங்கடேஷ் பண்ணையாரின் சகோதரி ஜானகி, அவரது கணவர் மாவடி மகாலிங்கம், பண்ணையார் உறவினர்கள் ரவிசங்கர், பிரபாகரன், ராம்குமார் மற்றும் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் துணை தலைவர் சிவ.செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவரது சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தட்சணமாற நாடார் சங்கம்

இதில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை, என்.வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் ஆகியவற்றின் தலைவரும், பனங்காட்டு மக்கள் கழகம் கட்சியின் தலைவருமான எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார், ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவருமான விஷ்ணு பிரசாத், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், சென்னையில் உள்ள தூத்துக்குடி நெல்லை நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் அம்பத்தூர் செல்வக்குமார் நாடார், முன்னாள் தலைவர் பத்மநாபன், தேசிய நாடார் கூட்டமைப்பின் தலைவர் குமரி சிவாஜி, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன்,

நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன் நாடார், ஆத்தூர் சுற்று வட்டார நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.கே.செல்வராஜ் நாடார், செயலாளர் காமராஜ், பொருளாளர் கோட்டாளமுத்து, துணை தலைவர் பிரேம் குமார், துனை செயலாளர்கள் அரவிந்தன், முத்து செல்வம், முன்னாள் பொருளாளர் லிங்கராஜ் மற்றும் திருச்செந்தூர் நாடார் உறவின்முறை சங்க தலைவர் சண்முகவேல் நாடார், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் அக்தார் கருத்தப்பாண்டி நாடார், மூலக்கரை நற்பணி மன்ற நிர்வாகிகள், பழைய காயல் கிராம பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், புறையூர் கிராம பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், அம்மன் கிராம பஞ்சாயத்து தலைவர் ஞானராஜ், மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஏ.பி. சதீஷ்குமார், ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாண சுந்தரம், வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கத்தின் மண்டல பொறுப்பாளர் சொர்ணவேல் குமார், தூத்துக்குடி மாவட்ட பனங்காட்டு மக்கள் கழக செயலாளர் ஓடை செல்வம் நாடார், ஆறுமுகநேரி நற்பணி மன்ற தலைவர் கிளாட்சன் மற்றும் நிர்வாகிகள் இசக்கிமுத்து, ஆறுமுகநேரி ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் தாமோதரன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.- காங்கிரஸ்

தி.மு.க. சார்பில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு உதவி செயலாளர் சிம்லா முத்து சோழன், தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோயல், மணல்மேடு சுரேஷ், திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை, ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், துணை செயலாளர் பக்கீர் முகைதீன், சமத்துவ மக்கள் கட்சியின் ஆறுமுகநேரி நகர செயலாளர் சீமான், திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு, ஆழ்வார்திருநகரி வட்டார தலைவர் பாலசிங், ஆத்தூர் நகர தலைவர் சின்னத்துரை, மாநில செயற்குழு உறுப்பினர் பிச்சிவிளை சுதாகர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்பாளர் எஸ்.வி.பி.எஸ்.மாணிக்கராஜா, மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏரல் ரமேஷ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பொன்ராஜ்,

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், ஆறுமுகநேரி நகர முன்னாள் செயலாளர் அரசகுரு, காணம் நகர செயலாளர் செந்தமிழ் சேகர், மாவட்ட பிரதிநிதி ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர்,

ம.தி.மு.க. திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பி.எஸ்.முருகன், ஆறுமுகநேரி செயலாளர் நாராயணன், தமிழ் மாநில காங்கிரஸ் ஆழ்வார்திருநகரி வட்டார தலைவர் கீரனூர் முருகேசன், திருச்செந்தூர் வட்டார தலைவர் சுந்தரலிங்கம், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகன்,

பா.ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா, மாநில துணைத்தலைவர் கருநாகராஜன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், பொதுச் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகேஷ் பாண்டியன், இந்து முன்னணி மாநில முன்னாள் பொருளாளர் எஸ்.எஸ்.ஆதித்தன், சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் காமராசு, மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஸ்வநாதன், நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ்,

தமிழ்நாடு யாதவர் மகா சபை இளைஞர் அணி செயலாளர் பொட்டல் துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா மண்டல முன்னாள் அமைப்பாளர் சொ.சு.தமிழினியன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் இரா.பரமகுரு, மதுரை மாவட்ட செயலாளர் சின்னத்துரை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள், விருதுநகர் மாவட்ட செயலாளர் டேனியல், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். நினைவு தினத்தை முன்னிட்டு மூலக்கரையில் அன்னதானம் நடைபெற்றது.

வெங்கடேஷ் பண்ணையார் ரதம்

மூலக்கரையில் இருந்து என்.வெங்கடேஷ் பண்ணையாரின் ரதம் நற்பணி மன்ற நிர்வாகி இசக்கிமுத்து தலைமையில் அம்மன்புரத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மூலக்கரையில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் மூலக்கரையில் இருந்து அம்மன்புரம் வரை நடந்தே வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் வேப்பலோடைய சேர்ந்த வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க பெண்கள் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். இதில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மதுரை, விருதுநகர், கோவை, சென்னை, ராமநாதபுரம் குமரி போன்ற மாவட்டங்களில் இருந்து வெங்கடேஷ் பண்ணையாரின் ஆதரவாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஆறுமுகநேரி, மூலக்கரை, திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத், பழையகாயல், ஆத்தூர் உட்பட பல இடங்களில் வெங்கடேஷ் பண்ணையார் உருவப்படத்துக்கு பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கடை அடைப்பு

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு ஆறுமுகநேரி, தெற்காத்தூர், பழையகாயல் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுரையின்படி கூடுதல் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ஆறுமுகம், தெய்வம், ராஜேந்திரன் மற்றும் துணை சூப்பிரண்டுகள் திருச்செந்தூர் வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் மாயவன் உள்பட 6 துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்