மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா

மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. கனிமொழிஎம்.பி. வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

Update: 2022-12-13 18:45 GMT

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரத்தில் அம்புரோஸ் மேல்நிலைப் பள்ளியில் கனிமொழி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உப தலைவர் தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். சேகர தலைவர் நவராஜ் ஜெபம் செய்தார். பள்ளி தாளாளர் ஜான் ஸ்டிபன் பொன்னுத்துரை, மெஞ்ஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருபா ராஜபிரபு, பொதுமகமை சங்க தலைவர் ஜெயபோஸ், செயலாளர் நவமணி ராபர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன் வரவேற்று பேசினார்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய வகுப்பறை கட்டிடத்தை எம்.பி. ரிபன் வெட்டி திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, செம்மறிகுளம் பஞ்சாயத்து தலைவர் அகஸ்டா மரியதங்கம், மாவட்ட கவுன்சிலர் ஜெசிபொன்ராணி, எலியட் டக்ஸ் போர்டு பெண்கள் மேல் நிலைப்பள்ளி தாளாளர் சசிக்குமார் பொன்துரை, தி.மு.க, கிளைசெயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்