தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-09 18:45 GMT

சாயல்குடி, 

கடலாடி அருகே கருங்குளம் கிராமத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஐசக் நியூட்டன் வரவேற்றார். மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் முருகன், பொருளாளர் செந்தில் பொன்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயபால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்வது, ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட அரசாணையை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி சென்னையில் நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொறுப்பாளர் சக்தி முருகன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்