தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கூட்டம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தேவகோட்டை கிளை கூட்டம் கிளை தலைவர் போஸ் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் கீதா வரவேற்றார். கிளை பொறுப்பாளரும், மாவட்ட துணை செயலாளருமான ராசேந்திரன் பங்கேற்று பேசினார்.
மாவட்ட செயலாளர் அன்பரசன், மாநில அளவில் நாளை(சனிக்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ள இந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் மொழி பாதுகாப்பு மாநாடு குறித்த செய்திகளையும் அதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் புரட்சித்தம்பி எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தேவகோட்டை தே.பிரித்தோ மேல்நிலைப்பள்ளியின் மூத்த அறிவியல் ஆசிரியர் கவிஞர் பிரைட், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் சாகித்ய அகாதமி விருது பெற்ற "காவல் கோட்டம்" நாவலை பகுப்பாய்வு செய்து அழகப்பா பல்கலைக்கழக தமிழ் உயராய்வு மையத்தில் முனைவர் பட்டம் பெற்ற தே.பிரித்தோ மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் அன்பரசனுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வக்கீல் லாரன்ஸ், கிளை உறுப்பினர் அஜீஸ் கான் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். முடிவில் துணை செயலாளர் ஞான சுபதர்ஷினி நன்றி கூறினார்.