தமிழக விவசாயிகள் சங்க கூட்டம்

ஓசூரில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-29 14:28 GMT

ஓசூர்

ஓசூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் நடைபெற்றது. இ்தில், மாவட்ட தலைவர் வண்ணப்பா, பொருளாளர் சுப்பிரமணிய ரெட்டி, நிர்வாகிகள் சர்வேஷ் ரெட்டி, நாகராஜ் ரெட்டி, நரசிம்மரெட்டி, சந்திரா ரெட்டி கிருஷ்ணப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடுத்த (ஜூலை) மாதம் 5-ந் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து மாநில தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் வேளாண்மைக்காக பட்ஜெட்டில் 30 சதவிகிதம் நிதி ஒதுக்குகிறார்கள். தமிழகத்திலே 17 சதவீதம் மட்டுமே ஒதுக்குகிறார்கள். 30 சதவீதம் தமிழகத்திலே ஒதுக்கினால் சிறப்பான வேளாண்மை வளர்ச்சி ஏற்படும். தேசிய நதிகள் இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், சில மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என தெரிகிறது. அவர்களுடைய ஒத்துழைப்பை பெறுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்