இ-பட்டா வழங்குவது குறித்து உதவி கலெக்டர் ஆய்வு
நாட்டறம்பள்ளி பகுதியில் இ-பட்டா வழங்குவது குறித்து உதவி கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடதெக்குப்பட்டு கிராமத்தில் திருப்பத்தூர் உதவி கலெக்டர் பானுமதி தலைமையில் வருவாய் துறையினர் இ-பட்டா வழங்குவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் புலதணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது நாட்டறம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம் மற்றும் கிராம உதவியாளர் ஆனந்தன் உள்ளிட்ட வருவாய் துறையினர் உடனிருந்தனர்.