இலவச வீட்டுமனை பட்டா வழங்க உதவி கலெக்டர் ஆய்வு
கணியனூர் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க உதவி கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் உள்ள கணியனூர் கிராமத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் 6 குடும்பத்தினர் வீடுகட்டி வசிகத்து வருகின்றனர். இந்த வீடுகளை அகற்றிவிட்டு, அவர்களுக்கு வேறு இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி ஊரக வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக அதில் மகாத்மா காந்தி தேசிய திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்டிக்கொடுப்பது குறித்து ராணிப்பேட்டை உதரி கலெக்டர் பூங்கொடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலவை தாசில்தார் ஷமீம், துணை தாசில்தார் சத்யா, வருவாய் ஆய்வாளர் வீரராகவன் கிராம நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.