மனைவியை தாக்கி கொலை மிரட்டல்

மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எலக்ட்ரீஷியனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-23 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிஇந்திரன் (வயது 35) எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி மகாலட்சுமி(30). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. திருமணநாள் முதல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மகாலட்சுமி தனது சித்தப்பா வீட்டு நிகழ்ச்சிக்கு செல்கிறேன் எனக்கூறியபோது ஜோதிஇந்திரன் மறுப்பு தெரிவித்து அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மகாலட்சுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிஇந்திரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்