தொழிலாளி மீது தாக்குதல்:வாலிபர் கைது

மாப்பிள்ளையூரணியில் தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-02 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் சண்முகராஜ். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 24). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தங்க கணேஷ் (31) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன், அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் இசக்கிமுத்து (41) என்பவருடன் மாப்பிள்ளையூரணியில் நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த தங்க கணேஷ் மற்றும் சிலர் சேர்ந்து பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்ககணேசை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்