தொழிலாளி மீது தாக்குதல்
தூத்துக்குடியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி அண்ணாநகர் 7-வதுதெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மதுபோதையில் நடனம் ஆடினாராம். இது தொடர்பாக அருண்குமாருக்கும், அதேபகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அருண்குமார், சுருளி என்பவர் வீட்டுக்கு சென்று தகராறு செய்தாராம். இதில் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த மதன் (38), சுருளி ஆகிய 2 பேரும் சேர்ந்து அருண்குமாரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அருண்குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் மதன், சுருளி ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.