தொழிலாளி மீது தாக்குதல்

தொழிலாளியை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-09-11 19:46 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ஊர் பெரியவர்கள் படத்துடன் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனரை அதே ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் பிளேடால் கிழித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊர் பெரியவர்கள் சஞ்சய்யிடம் தட்டிக் கேட்டனர். அப்போது அவருக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் பேசினார். அப்போது அவருக்கும், லட்சுமணன் மகன் தொழிலாளியான பிரவின்ராஜாவுக்கும் (வயது 29) தகராறு ஏற்பட்டது. பின்னர் பெரியவர்கள் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமணன் நடுச்சாலைப்புதூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை முத்துக்குமார், அவரது சகோதரர்கள் கணேசன், முத்துராஜ் மற்றும் ஆனந்தன் ஆகிய 4 பேரும் அவதூறாக பேசினர். இதைப்பார்த்த பிரவின்ராஜா தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து பிரவின்ராஜாவை அவதூறாக பேசி, கம்பு, இரும்பு கம்பி, அரிவாள்களால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த பிரவின்ராஜா களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமார் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்