தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் கைது

வளர்ப்பு நாய் மீது கல்லெறிந்ததை தட்டிக்கேட்ட தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-10 18:45 GMT

சிங்காநல்லூர்

கோவை ஒண்டிப்புதூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 59). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது நாயை அழைத்து கொண்டு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பார்த்து நாய் குரைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள், நாய் மீது கல்லெறிந்து தாக்கினர்.

இதையடுத்து நாகராஜ் அந்த வாலிபர்களிடம் இதுகுறித்து தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் 3 பேரும் நாகராஜை தாக்கினர். இதில் காயமடைந்த நாகராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தொழிலாளியை தாக்கியது ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் குமார் (வயது 21), சக்தி (33), ஹசன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்