ஆடு மேய்க்கும் தகராறில் பெண் மீது தாக்குதல்; மற்றொரு பெண் கைது

ஏர்வாடி அருகே ஆடு மேய்க்கும் தகராறில் பெண்ணை தாக்கிய மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-30 18:48 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள ஆலங்குளம் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா மனைவி மல்லிகா (வயது 57). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி வசந்திக்கும் (55) ஆடுகள் மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வசந்தி, மல்லிகாவை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வசந்தியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்