கந்துவட்டி கேட்டு பெண் மீது தாக்குதல்; இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

நெல்லையில் கந்துவட்டி கேட்டு பெண்ணை தாக்கியதாக இந்து மக்கள் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-17 21:13 GMT

பாளையங்கோட்டை:

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் விஸ்வரத்தினா நகர் 'ஏ' காலனியை சேர்ந்தவர் பாலகுமார். இவரது மனைவி கீதா (வயது 42). இவர் சுத்தமல்லி பாரதிநகரை சேர்ந்த ராஜாபாண்டியனிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதற்கு மாதம் ரூ.30 ஆயிரம் வரை வட்டி கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் வட்டி கட்டவில்லை என்பதால் ராஜாபாண்டியன், கீதாவின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜாபாண்டியன், சாதி பெயரை சொல்லி கீதாவை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கீதா பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் விசாரணை நடத்தி, ராஜா பாண்டியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கந்துவட்டி கேட்டதாக வழக்குப்பதிந்து அவரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட ராஜாபாண்டியன், இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்