பட்டா கத்தியுடன் தகராறு செய்ததை தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்
பட்டா கத்தியுடன் தகராறு செய்ததை தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த திவான்சாபுதூர் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் தீனதயாளன்(வயது 22). கூலி தொழிலாளி. இவர் நேற்று அங்குள்ள பல்நோக்கு மையம் அருகே பொது இடத்தில் கையில் பட்டா கத்தியுடன் நின்று கொண்டு தகாத வார்தைகளால் அந்த வழியாக செல்பவர்களை பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அதே பகுதிைய சேர்ந்த மகேஸ்வரி(33) என்பவர் அவரை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், திடீரென மகேஸ்வரியை கையால் தாக்கினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை பிடிக்க அங்கு ஓடி வந்தனர். உடனே அவர்களை பார்த்து பட்டா கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு தீனதயாளன் தப்பி சென்றார். அப்போது பட்டா கத்தியை தவறவிட்டு சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீனதயாளனை கைது செய்தனர்.