சங்ககிரி
சங்ககிரி அருகே மோரூர் கிழக்கு ஊராட்சி புள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கலையரசி (வயது 43). தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (67). இவர் கலையரசியின் தாய்மாமன் ஆவார். இவருடைய மகன் மாதேஷ் (42).
இவர்கள் புள்ளிபாளையத்தில் கலையரசியின் வீட்டுக்கு சென்று வீட்டுக்கான பட்டா தங்களின் பெயரில் உள்ளதாக கூறி தகராறு செய்து வந்தனர். சம்பவத்தன்று கலையரசி வீட்டுக்கு சென்ற கிருஷ்ணன், அவருடைய மனைவி பாக்கியம், மகன் மாதேஷ், மருமகள் மணிமேகலை, மகள் மகேசுவரி ஆகியோர் கலையரசியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் கிருஷ்ணன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கிருஷ்ணன், மாதேஷ், மணிமேகலை ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.