காய்கறி கடை உரிமையாளர் மீது தாக்குதல்

காய்கறி கடை உரிமையாளர் மீது தாக்குதல்

Update: 2022-12-24 18:45 GMT

கோவை

கோவை டி.கே. மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருபவர் கரும்புகடையை சேர்ந்த காஜா உசேன்(வயது 38). இவரது கடைக்கு சித்ராவில் ஓட்டல் நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த ரியாஸ்(41) காய்கறிகள் வாங்க வருவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ரியாஸ் காய்கறி வாங்கிவிட்டு அதற்கு உரிய தொகை ரூ.3,650-ஐ வழங்காமல் பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடை உரிமையாளர் காஜா உசேனுக்கும், ரியாசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காஜா உசேன் தனக்கு தர வேண்டிய பணத்துக்கு பதிலாக ரியாசிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2,500 ரொக்கத்தை பறித்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் தகாத வார்த்தைகளால் பேசி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பினரும் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஜா உசேன் மற்றும் ரியாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்