சங்க நிர்வாகி மீது தாக்குதல்

கழுகுமலையில் சங்க நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-15 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை எட்டயபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 56). இவர் கழுகுமலை ஆயிர வைசிய செட்டியார் சங்கத்தின் பொருளாளராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் சங்கத்திற்கு உட்பட்ட காசுக்கார கிணற்று தெருவில் உள்ள வீடுகளில் வெள்ளை அடிப்பதற்காக பெயிண்டர் காமராஜ் என்பவருடன் இளங்கோவன் சென்றுள்ளார். அப்போது வெள்ளை அடிக்க வேண்டிய வீட்டின் முன் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அகல் விளக்கு மூடைகளை அகற்றுமாறு அப்பகுதியில் உள்ள ஜெயச்சந்திரன் என்பவரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜெயச்சந்திரனுக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த ஆனந்தி (43) என்பவரும் சேர்ந்து இளங்கோவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் அந்த இருவரும் இளங்கோவனை செங்கலால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரன், ஆனந்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்