டிராக்டர் டிரைவர் மீது தாக்குதல்; 2 பேர் கைது

களக்காட்டில் டிராக்டர் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-17 21:59 GMT

களக்காடு:

களக்காடு கக்கன்நகர், நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மால்வின் (வயது 20). டிராக்டர் டிரைவர். நேற்று இரவு இவர் டிராக்டரில் உரம் ஏற்றிக்கொண்டு, மூங்கிலடி அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது களக்காடு மிஷன் ஸ்கூல் தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் ஆல்வின் (24), மூங்கிலடியை சேர்ந்த தானியேல் மகன் செல்வதாஸ் (26) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து டிராக்டரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மால்வினிடம், மோட்டார் சைக்கிளுக்கு வழி விடாமல் செல்வதா? எனக் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆல்வின், செல்வதாஸ் ஆகியோர் மால்வினை அவதூறாக பேசி தாக்கினர். மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆல்வின், செல்வதாஸ் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்