வாலிபர் மீது தாக்குதல்
குரும்பூர் அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே உள்ள வரண்டியவேல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் (வயது 25), ரவிக்குமார் (26). இவர்கள் 2 பேரும் கோவையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்குள் அடிக்கடி தொழில் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 9-ந் தேதி ஊரில் முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. அப்போது, சதீஷ்குமாரை ரவிக்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.