இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு

இளம்பெண் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-11 18:45 GMT

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் திருமணமான 23 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததோடு, தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. அந்த பெண்ணிடம் உரையாடியதை தனது செல்போனில் கணேசன் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. பின்னர் அந்த உரையாடல் பதிவை தனது நண்பர்கள் சிலருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். அந்த பதிவை கேட்ட கணேசனின் நண்பர்களான எஸ்.ஒகையூரை சேர்ந்த செந்தூர், சூர்யா, தாமு மற்றும் கள்ளக்குறிச்சி அருகே சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜா, தினேஷ் ஆகியோர் அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று தங்களிடம் செல்போனில் பேசுவதோடு மட்டும் அல்லாமல் உல்லாசமாகவும் இருக்க வேண்டும் என கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கணேசன், செந்தூர், சூர்யா, தாமு, ராஜா, தினேஷ் ஆகிய 6 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்