போலீஸ்காரர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
மதுரை அரசரடி சிக்னலில் பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அரசரடி சிக்னலில் பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
மதுரை பழங்காநத்தம், நேதாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அருண் பிரபு (வயது 35). கரிமேடு போக்குவரத்து பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் அரசரடி சிக்னலில் பணியில் இருந்தார்.
அப்போது சிக்னல் விதியை மீறி வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்தார். அப்போது ஆட்டோவிற்குள் இருந்த 2 பேர் கீழே இறங்கி ஆட்டோவை அனுப்பி விட்டு போக்குவரத்து போலீஸ்காரர் அருண்பிரபுவிடம் தகராறு செய்தனர். மேலும் போலீஸ்காரரின் சட்டையை பிடித்து இழுத்து அவதூறாக பேசி தாக்கினர். அப்போது அங்கு பணியில் இருந்த மற்ற போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
2 பேர் கைது
இது குறித்து அருண்பிரபு கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் புதுஜெயில்ரோடு முரட்டன்பத்திரியை சேர்ந்த கார்த்திக் (23), ஆரப்பாளையம் முனிசிபாளையம் கண்மாய்க்கரை பகுதியைச் சேர்ந்த சபி முகமது (23) என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.