ஊராட்சி மன்ற தலைவர் மனைவி மீது தாக்குதல்

ஊராட்சி மன்ற தலைவர் மனைவி மீது தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-07-30 17:20 GMT

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள வடக்கலூர் ஊராட்சியில் நூலக கட்டிடத்திற்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சின்னதுரை(வயது 43) என்பவர் குடிபோதையில் இந்த இடத்தில் ஏன் கழிப்பிடம் கட்டுனீர்கள் என்று ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணனின் மனைவி பிரவீனா(33) வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர், பிரவீனாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்