ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் அருகே உள்ள முத்தன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிராஜன். இவரின் உறவினர்களான இளங்கோவன் (வயது 38), பிரபாகரன்(36), செல்வேந்திரன்(33), நாகநாதன்(65), அம்மாகண்ணு (60), அனிதா(28) ஆகியோர் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீதிராஜன், அவரது மனைவி கலா இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவர்களை வழிமறித்து இளங்கோவன் உள்பட 6 பேர் தாக்கினர். இதுகுறித்து புகாரின் பேரில் ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.