ஹாரன் அடித்த வாலிபர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு

ஹாரன் அடித்த வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-23 17:49 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி மகன் சந்தோஷ் (வயது 22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மருந்து வாங்குவதற்காக சிலால் சென்றுள்ளார். அப்போது சிலால் நான்கு ரோடு பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்லும் முயற்சியில் சாலையின் குறுக்கே நின்றிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்கக்கோரி சுந்தோஷ் ஹாரன் (ஒலி) அடித்துள்ளார். அந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்த இளைஞர்கள், இதனால் ஆத்திரமடைந்து சந்தோஷை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் சந்தோசுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்தோஷ் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சந்தோஷை அடித்து தாக்கிய தேவமங்கலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சுதாகர்(22), சுப்ரமணி மகன் சதீஷ்குமார்(18), அன்பழகன் மகன் விக்னேஸ்வரன், ஆறுமுகம் மகன் வேல்முருகன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்