கல்வி அதிகாரி மீது புத்தகத்தை வீசி தாக்கிய தலைமை ஆசிரியர் வீடியோ வைரலானதால் பரபரப்பு

கல்வி அதிகாரி மீது புத்தகத்தை வீசி தலைமை ஆசிரியர் ஒருவர் தாக்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Update: 2022-07-12 17:18 GMT


உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூரில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து வருபவர் சேகர். இவருக்கு கடந்த மாதம் வழங்கப்பட்ட ஊதியத்தில், குறிப்பிட்ட நாட்களுக்கான சம்பளத்தை வழங்காமல் பிடித்தம் செய்துள்ளனர். இதுபற்றி கேட்பதற்காக சேகர் திருநாவலூர் வட்டார கல்வி அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த வட்டார கல்வி அதிகாரி முரளிகிருஷ்ணனிடம், அவர் தன்னிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்குமாறு கேட்டு வாக்குவாதம் செய்தார்.

புத்தகத்தை வீசினார்

அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் முரளி கிருஷ்ணனை திட்டினார். ஒரு கட்டத்தில் அவரது மேஜையில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து முரளி மீது வீசி தாக்கினார். அந்த புத்தகம் அவரது தலையின் மீது உரசியபடி சென்று விழுந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேகரை அலுவலகத்தை விட்டு வெளியே இழுத்து சென்றனர்.


இது தெடர்பான வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைராலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவலூர் போலீசில் முரளிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்