டிரைவர் மீது தாக்குதல்
நெல்லை டவுனில் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியதாக தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலங்குளம் பட்டேல் தெருவை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் பாரதி (வயது 26). இவர் லோடு வேன் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டுக்கு லோடு ஏற்றி வந்தார். மார்க்கெட்டின் உள்பகுதிக்குள் சென்றபோது, சந்திப்பு குறுக்குத்துறையை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி வீரமணி என்பவர் எதிரே வந்துள்ளார். அவர் மீது, பாரதி ஓட்டிச்சென்ற லோடு வேன் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி கையில் வைத்திருந்த மூட்டை தூக்கும் கொக்கியால் பாரதியை தாக்கினார். இதில் காயம் அடைந்த பாரதி தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.