மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்

மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2023-04-14 20:40 GMT

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள பூலத்தை சேர்ந்தவர் உடையார் மகன் மாரியப்பன் (வயது 33). மாற்றுத் திறனாளி. கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கும், தெற்கு மீனவன்குளத்தை சேர்ந்த இன்சின்துரை மகன் சுடலைமணி என்பவருக்கும், டாஸ்மாக்கில் மது வாங்க சென்ற போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று தெற்கு மீனவன்குளத்திற்கு சென்ற மாரியப்பன், அங்கு நின்று கொண்டிருந்த சுடலைமணியிடம் சமாதானம் பேச சென்றார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுடலைமணி, மாரியப்பனை மது பாட்டிலால் தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிங்கிகுளம் அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நேசமணிகண்டன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சுடலைமணியை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்