மாற்றுத்திறனாளி வாலிபர் மீது தாக்குதல் - 4 பேர் மீது வழக்கு

மாற்றுத்திறனாளி வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-03-27 21:24 GMT


மதுரை சிந்தாமணி, இந்திரா நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் தினேஷ் (வயது 21). மாற்றுத்திறனாளியான இவருக்கு காது, வாய் பேச முடியாது. சம்பவத்தன்று இரவு சிந்தாமணி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியது.

இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்